Published : 19 Dec 2014 11:17 AM
Last Updated : 19 Dec 2014 11:17 AM

பிபிசி தமிழ்ச் சேவையை இந்தியுடன் இணைக்கக்கூடாது: வைகோ கோரிக்கை

பிபிசி வானொலியின் தமிழ்ச் சேவையை இந்தியுடன் இணைக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உலகின் மிகப்பெரிய ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி, 150 தலைநகரங்களில் 28 மொழிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. தற்போது தமிழ்ச் சேவை ஒலிபரப்பை பிபிசி இந்தி சேவையுடன் இணைத்து டெல்லியில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் சுமார் 70 லட்சம் நேயர்கள் உள்ளனர். டெல்லிக்கு மாற்றப்பட்டால் இந்தி மொழியின் ஆதிக்கம் தமிழோசையிலும் இருக்கும். இதனால் பெருவாரியான இலங்கைத் தமிழர்களின் செய்தியைக் கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்படும். மேலும், இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளே அதிகம் ஒலிபரப்பப்படும்.

சில தமிழ் விரோத சக்திகள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும்போது எதிர்காலத்தில் பிபிசி தமிழோசை முற்றிலும் நிறுத்தப்படும் அபாயமும் ஏற்படக்கூடும். எனவே, பிபிசி தமிழ் சேவையை இந்தியுடன் இணைக்கக் கூடாது.

இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x