Published : 04 Dec 2014 10:13 AM
Last Updated : 04 Dec 2014 10:13 AM

தன்னம்பிக்கையுடன் திறனை வளர்க்க வேண்டும்: மாற்றுத் திறனாளிகள் இசை விழாவில் கர்நாடக இசைக் கலைஞர் பேச்சு

மாற்றுத் திறனாளிகள் தன்னம் பிக்கையுடன் தங்களுடைய திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கர்நாடக இசைக் கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணன் கூறி யுள்ளார்.

வோடஃபோன் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் கொரமண்டல் சார்பில் மாற்றுத்திறனாளி கலைஞர் களுக்கான ’பேரலல் மியூசிக் ஃபெஸ்ட் - 2014’ இசை விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. பல்வேறு மாற்றுத்திறனாளிக் கலைஞர்கள் இசை விழாவில் கலந்துகொண்டு, தங்களது இசைத் திறனை வெளிப்படுத்தினர்.

இவ்விழாவில் கவுரவ விருந் தினராக கலந்துகொண்ட கர்நாடக இசைக்கலைஞர், மிருதங்க வித்வான் டாக்டர் டி.வி.கோபால கிருஷ்ணன் பேசும்போது, ‘‘இளம் வயதில் நமக்குள்ளிருக்கும் இசைத் திறமையை நாம் உணர்ந்து கொண்டு, அதனை வளர்த் தெடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தவறாமல் பயிற்சி செய்ய வேண்டும். நாம் ஒரு மாற்றுத் திறனாளி என்கிற ஞாபகமே இல்லாத வகையில் தன்னம்பிக் கையுடன் உங்கள் திறனை நீங்கள் வெளிக்காட்ட வேண்டும். ஒவ் வொருவரும் தனக்கென ஒரு ஆசா னைத் தேடிப்போய் இசை ஆற் றலை வளர்த்துக்கொண்டால், இன்றைய சூழலில் ஊடக வாய்ப்புகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்’’ என்று கூறினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ‘தி இந்து’ நிறுவன கோ-சேர்மனும், மியூசிக் அகாடமி யின் தலைவருமான என்.முரளி, இசைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி கலைஞர் களுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசும்போது, ‘‘மாற்றுத் திறனாளி களின் இசைத் திறனை அடையாளங் கண்டு வளர்த்தெடுக்கும் உன்னதப் பணியை கடந்த 10 ஆண்டுகளாகச் செய்துவரும் உங்களின் செய லைப் பாராட்டுகிறேன். இசைக் கலைஞர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் மியூசிக் அகாடமியின் தலைவராக நான் இருந்து செய்து வருகிற பணிகளை இன்னும் சிறப் பாகத் தொடர வேண்டும் என்கிற ஆர்வத்தை இந்த நிகழ்வு தூண்டி யுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக் குள் இவ்வளவு ஆற்றலுடன் கூடிய இசைத் திறனா என்று வியந்து போனேன். அவர்கள் தங்களது இசையாற்றலை மேலும் வளர்த்துக்கொண்டு சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துகிறேன்’’ என்றார்.

விழாவில், கலைமாமணி ஹெச்.ராமகிருஷ்ணனுக்கு ‘சிறந்த மாற்றுத் திறனாளி கலைஞர்-2014’ விருது வழங்கப்பட்டது. சோழா எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிர் வாக இயக்குநர் எஸ்.எஸ்.கோபாலரத்னம், வோடஃபோன் செயல்பாட்டு இயக்குநர் சுரேஷ் குமார், வோடஃபோன் மார்க் கெட்டிங் தலைவர் திலீப்குமார், ரோட்டரி கிளப் தலைவர் எஸ்.சுரேஷ், கலைமாமணி ஓ.எஸ்.அருண், காரைக்கால் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x