

கணவனின் மது பழக்கத்தால் மனம் வெறுத்து தீக்குளித்த மனைவி யும், அவரை காப்பாற்ற முயன்ற கண வனும் தீயில் கருகி இறந்தனர். அவர்களின் 2 பிள்ளைகளும் பெற்றோரை இழந்து தவிக்கின் றனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் தனசேகர் (40). இவரது மனைவி மகாலட்சுமி (38). இவர்களுக்கு லாவண்யா (11) என்ற மகளும், பிரசாந்த் (9) என்ற மகனும் உள்ள னர். லாரி டிரைவரான தனசேகருக்கு குடிப் பழக்கம் உண்டு. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்படும்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை என்பதால் சமையல் செய்வதற்கு ஆட்டு இறைச்சி வாங்கிக் கொடுத்துவிட்டு வெளி யில் சென்ற தனசேகர் நன்றாக குடித்துவிட்டு வீட்டுக்கு வர, மகாலட்சுமி கடுமையாக கண்டித் தார். இதனால் ஆத்திரமடைந்த தனசேகர், மகாலட்சுமியை தாக்கி யதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அன்று இரவில் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடுமையான மன அழுத்தத் தில் இருந்த மகாலட்சுமி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றினார். அவரை அச்சுறுத்தும் நோக்கத்தில் தனசேகரும் அதே கேனை வாங்கி தனது உடலிலும் மண்ணெண் ணெய்யை ஊற்றிக் கொண்டார். 2 பேரின் உடலிலும் மண்ணெண் ணெய் வடிந்த நிலையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மகாலட்சுமி தீப்பெட்டியை உரசி உடலில் தீ வைக்க, உடல் முழுவதும் உடனே தீப்பிடித்து எரிய ஆரம் பித்தது. தீயை அணைப்பதற்காக தனசேகர் முயற்சிசெய்ய, அவரது உடலிலும் தீ பிடித்துக் கொண்டது.
கணவனும், மனைவியும் உடலில் தீப்பிடித்து எரிந்த நிலை யில் பயங்கரமாக அலறினர். பெற்றோரின் அலறல் சத்தத்தை கேட்டு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த லாவண்யாவும், பிரசாந்தும் வீட்டுக்குள் ஓடி வந்தனர். அருகே இருந்தவர்கள் அசம்பாவிதத்தை உணர்ந்து விரைந்து வந்து தீயை அணைக் கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தனசேகரும், மகாலட்சுமி யும் பலத்த தீக்காயமடைந்து கீழே விழுந்தனர்.
போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை யில் சேர்த்தனர். தனசேகருக்கும், மகாலட்சுமிக்கும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் இறந்தனர்.
இவர்களது பிள்ளைகளான லாவண்யா 6-வது வகுப்பும், பிரசாந்த் 4-ம் வகுப்பும் படிக்கிறார் கள். அவர்கள் நிர்க்கதியாக விடப்பட்டுள்ளனர்.