

காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட தலைமையிடத்து கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த மாரியப்பன் மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராகவும், மதுரை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த கோபால்சாமி திருப்பூர் மாவட்ட தலைமையிடத்து கூடுதல் கண்காணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையராக இருந்த மோகன்ராஜ் ஆவடி போலீஸ் பயிற்சி பள்ளி கூடுதல் கண்காணிப்பாளராகவும், திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த அசோக்குமார் சென்னை மாநகர காவல் நுண்ணறிவு பிரிவு கூடுதல் துணை ஆணையராகவும், கடலூர் மாவட்ட தலைமையிடத்து கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த வெங்கடாச்சலபதி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை காவல்துறை இயக்குநர் அசோக்குமார் வெளியிட்டுள்ளார்.