Published : 23 Dec 2014 08:47 AM
Last Updated : 23 Dec 2014 08:47 AM

விகடன் குழுமத் தலைவர் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி

விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் உடலுக்கு அரசியல் கட்சியினர், சினிமா துறை பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் நேற்று அஞ்சலி செலுத் தினர். பொதுமக்களின் அஞ்ச லிக்கு பிறகு அவரது உடல் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மனைக்கு தானமாக வழங்கப் பட்டது.

விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் (79) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கு தனது உடலை தானமாக தரவேண்டும் என்ற அவரது விருப்பத்தின்படி, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக் காக, எஸ்.பாலசுப்ரமணியனின் உடல் நேற்று போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது.

நேற்று காலை 7 மணிமுதல் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

எஸ்.பாலசுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

பாரம்பரியம் மிக்க ஆனந்த விகடனின் தலைவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி பத்திரிக்கை உலகை மட்டுமல் லாமல் அனைத்துதரப்பையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

எதையும் துணிச்சலாக விமர்சனம் செய்யும் நடுநிலை யான பத்திரிக்கையை அவர் நடத்தி வந்தார். அவரது குடும்பத் தினருக்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கராத்தே தியாகராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன், ஞானதேசிகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை மாவட்ட மதிமுக செயலாளர் வேளச்சேரி மணிமாறன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் எஸ்.பாலசுப்ரமணியன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

திரைத் துறையினர்

நடிகர்கள் சிவகுமார், சூர்யா, விஜய், சத்யராஜ், டி.ராஜேந்தர், விவேக், எஸ்.வி.சேகர், கிரேசி மோகன், சூரி, தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன், பிரமிட் நடராஜன், கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் சங்கர், கே.வி.ஆனந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் எஸ்.பாலசுப்ரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பத்திரிகையாளர்கள்

‘இந்து’ என்.ராம், துக்ளக் ஆசிரியர் சோ, ‘நக்கீரன்’ கோபால், ஞாநி, மதன், எழுத்தாளர்கள் சுபா, பாரதி கிருஷ்ணகுமார், சு.வெங்கடேசன், ஆறாம் திணை சிவராமன், சிவசங்கரி, பாலகுமாரன், மணா, மணியன் செல்வன் உள்ளிட்ட பலர் எஸ்.பாலசுப்ரமணியன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இரவு 7.45 மணிக்கு அவரது உடல் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x