

கங்கைகொண்டசோழபுரத்தில் டிச. 26-ல் நடைபெறுகிறது பெரம்பலூர் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு விழா மதிமுக சார்பில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் டிச. 26-ம் தேதி நடைபெறுகிறது.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நடைபெறும் இந்த விழாவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமை வகிக்கிறார். மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்கும் இந்த விழாவை, கோயிலை ஒட்டியுள்ள திடலில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதிமுக அரியலூர் மாவட்டச் செயலர் கு.சின்னப்பா கூறுகையில், “இன்று (டிச. 8) சென்னையில் நடைபெறும் மதிமுக மாவட்டச் செயலர்களுக்கான கூட்டத்தில், ராஜேந்திர சோழன் விழாவில் பங்கேற்கும் தமிழறிஞர்கள் குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.