போலி மதுபான ஆலை விவகாரம்: 2 எஸ்.ஐ. உட்பட 17 போலீஸார் இடமாற்றம்

போலி மதுபான ஆலை விவகாரம்: 2 எஸ்.ஐ. உட்பட 17 போலீஸார் இடமாற்றம்
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே செயல்பட்ட போலி மதுபான ஆலையை கடந்த 13-ம் தேதி இரவு போலீஸார் சுற்றி வளைத்து, 7,595 லிட்டர் எரிசாராயம் உள்ளிட்ட பொருட்கள், உப கரணங்களைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 4 பேரைத் தேடி வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலை அருகே செயல்பட்ட போலி மதுபான ஆலை தொடர்பாக காவல் துறை உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், 2 சப்-இன்ஸ் பெக்டர்கள் உட்பட 17 போலீஸார் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் வாசுகி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோரை புதுக் கோட்டை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்து திருச்சி சரக டிஐஜி செந்தாமரைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல, 15 போலீசாரையும் இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்த்ரா உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in