

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகம், புதுச்சேரியில் மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இருப்பினும், காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்