

ஆவின் பால் கலப்பட வழக்கு தொடர்பாக வைத்தியநாதன் உட்பட 19 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வைத்தியநாதன் 4 முறை மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் அவர் மீண்டும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கடந்த வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசா ரணைக்கு வந்தது. நீதிபதி குமார சரவணன் மனுவை இன்று(4-ம் தேதி) விசாரிக்க உள்ளதாக கூறி ஒத்தி வைத்து உத்தர விட்டார்.