Published : 23 Dec 2014 10:59 AM
Last Updated : 23 Dec 2014 10:59 AM

181 வனப் பணியாளர்கள் விரைவில் நேரடியாக நியமனம்

தமிழக அரசின் வனத்துறையில் 181 பணியாளர்கள் விரைவில் நேரடியாக நியமிக்கப்பட உள்ள தாக மாநில வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் வனத்துறையில் வனவர் (ஃபாரஸ்டர்), வன காப்பாளர் (ஃபாரஸ்ட் கார்டு), வனக்காவலர் (ஃபாரஸ்ட் வாட்சர்) ஆகியோர் இதுவரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு பட்டியல் பெறப்பட்டு அதில் இடம் பெற்றவர்களுக்கு தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் காவல்துறை, தீயணைப்புத் துறையினரை தேர்வு செய்ய தமிழ்நாடு சீரு டைப் பணியாளர் தேர்வு வாரியம் இருப்பதைப் போல வனத் துறை ஊழியர்களை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு என்ற புதிய தேர்வு வாரியத்தை தமிழக அரசு புதிதாக ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்வு வாரியம் மூலமாக முதல்முதலாக 165 வனவர்களும், அரசு ரப்பர் கழகத்துக்கு 16 கள உதவியாளர்களும் (மொத்தம் 181 காலியிடங்கள்) தேர்வு செய் யப்பட இருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பை மாநில வன சீருடை பணியாளர் தேர்வுக்குழு வெளி யிட்டுள்ளது. பிஎஸ்சி, பி.இ. பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக் கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதலில் எழுத்துத் தேர்வும் அதில் வெற்றிபெறுவோருக்கு உடல்திறன் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். எழுத்துத் தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜனவரி 2-ம் தேதி முதல் குறிப்பிட்ட தபால் அலுவலகங்களில் விற்பனை செய் யப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 31-ம் தேதி ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பம் வழங்கப்படும் தபால் அலுவலகங்கள், தேர்வு முறை, பாடத்திட்டம், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங் களை தமிழக அரசின் வனத்துறை இணையதளத்தில் (www.forests.tn.nic.in) தெரிந்து கொள்ளலாம் என்று மாநில வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு அறிவித் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x