Published : 10 Dec 2014 09:29 AM
Last Updated : 10 Dec 2014 09:29 AM

சென்னை பல்லவன் இல்லத்தில் மனு அளிக்க வந்தபோது போக்குவரத்து ஊழியர்கள் - போலீஸார் மோதல்: பொதுமேலாளர் அறை கண்ணாடிகள் உடைப்பு

சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்தனர். பொதுமேலாளர் அறை கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

தமிழக போக்குவரத்துத் துறை ஊழியர்கள் புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்தக் கோரி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் இடைக்கால நிவாரணமாக போக்குவரத்து ஊழியர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல் அரசு தன்னிச்சையாக முடிவை அறிவித்துள்ளதாக குற்றம்சாட்டிய போக்குவரத்து ஊழியர்கள், தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் நேற்று மனு அளித்தனர்.

மனு அளிப்பதற்காக ஆயிரத் துக்கும் அதிகமான ஊழியர்கள் சென்னை பல்லவன் இல்லத்துக்கு நேற்று காலை வந்தனர்.

அலுவலகத்துக்குள் செல்ல முயன்ற அவர்களை போலீஸார் தடுத்தனர். அப்போது இரு தரப்பின ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸாரை மீறி ஊழியர்கள் உள்ளே செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்பு கம்பிகள் விழுந்த தில் 2 ஊழியர்களின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், அலுவலகத்துக்குள் புகுந்து பொது மேலாளர் அறை கண்ணாடி களையும், அங்கிருந்த பூந்தொட்டி களையும் உடைத்தனர். இந்தப் போராட்டத்தால் பல்லவன் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செங்கோட்டையில் குண்டு வெடிப்பு

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையிலுள்ள அரசு விரைவுப் போக்குவரத்து கழக பணிமனையில் நேற்றுமுன்தினம் இரவில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 9.40 மணிக்கு திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. முதலில் பஸ் பேட்டரி வெடித்ததாகக் கூறப்பட்டது. பணிமனை மேலாளர் தரப்பிலும் போலீஸில் புகார் அளிக்கப்படவில்லை. இதனால் சம்பவம் குறித்த விவரம் தெரியவரவில்லை. இதனிடையே பணிமனையில் வெடித்தது நாட்டு வெடிகுண்டுதான் என நேற்று இரவு போலீஸாருக்கு தகவல் தெரியவந்தது. செங்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x