Published : 05 Dec 2014 11:51 AM
Last Updated : 05 Dec 2014 11:51 AM

தலா ரூ.50 ஆயிரம் விவசாயக் கடன் ரத்து: சந்திரபாபு அறிவிப்பு

ஆந்திர மாநிலத்தில் முதல் கட்டமாக ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ரூ. 50 ஆயிரம் வங்கிக் கடனை ரத்து செய்வதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹைதராபாதில் நேற்று அறிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடனை ரத்து செய்வதாக வாக்கு றுதி அளித்திருந்தோம். அதன்படி தற்போது ஒவ்வொருவருக்கும் ரூ. 1.50 லட்சம் வரை விவசாயக் கடன் ரத்து செய்ய உள்ளோம். இதில் முதல் கட்டமாக, வரும் 10-ம் தேதியிலிருந்து விவசாயிகளின் வங்கிக் கடன் ரூ. 50 ஆயிரத்தை ரத்து செய்கிறோம். இதன் மூலம் 22.79 லட்சம் விவசாயிகள் பயனடைய உள்ளனர்.

பயனாளிகளின் பட்டியல் வரும் 6-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். அடுத்த கட்ட வங்கிக் கடன் ரத்து குறித்து 4 வாரத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x