

புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண்களில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக கைதானவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் எஸ்பி ரவிக்குமார் நேற்று தெரிவித்தார்.
பெண் பலாத்கார வழக்கில் கைதான 2 பேரையும் செய்தியாளர் முன்பு முகத்தை மறைத்த நிலையில் போலீஸார் காண்பித்தனர். பின்னர், அவர்கள் அளித்த வாக்குமூலத்தையும் போலீஸார் தெரிவித்தனர்.
அதில் ‘‘இரவு நேரத்தில் நண்டு, பறவைகள் பிடிக்க செல்வது எங்கள் வழக்கம். கடந்த 18-ம் தேதியும் அதுபோல சென்றோம். அப்போது குடிப்பதற்காக சாராயம் வாங்கி வந்தோம். அதிகாலை நேரத்தில், சின்னகாலாப்பட்டு கடற்கரையோரம் ஒரு பெண் மயங்கி கிடந்தார். அவர் வெளி நாட்டை சேர்ந்தவர் என நினைத்தோம்.
தண்ணீர் கேட்டபோது பாக்கெட் சாராயத்தை வாயில் ஊற்றி மயக்க நிலையில் இருந்த அவரை பாலியல் பலாத்காரம் செய்தோம். அவரிடம் இருந்த மோதிரங்களை எடுத்துக் கொண்டோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.