

கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா பகுதியில் இருந்து சில மாதங் களுக்கு முன்பு யானைக் கூட்டம் ஒன்று தமிழக பகுதியில் நுழைந்தன. அவை ஓசூரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஆந்திர மாநில எல்லையிலும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் நவம்பர் 9-ம் தேதி கெல மங்கலம் அருகே கோவிந்தப்பா என்ற விவசாயியைத் தாக்கியதில் அவர் பலியானார்.
இந்நிலையில் கொங்கனப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தேவப்பா (55) சனிக்கிழமை இரவு வயலுக்கு காவலுக்குச் சென்றுள்ளார். நேற்று காலை அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத தால் குடும்பத்தார் தேடிச் சென்றுள் ளனர். அப்போது வயலில் அவர் இறந்து கிடந்துள்ளார். அருகில் யானையின் கால் தடம் இருந்ததால் யானை மிதித்து தேவப்பா இறந்தது உறுதி செய்யப்பட்டது.
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி வனச்சரகர் பாபு தலைமையி லான குழுவினரும், காவல்துறை யினரும் நேரில் ஆய்வு செய்து சடலத்தை மீட்டனர்.
யானை விரட்டும் பணிக்காக நிரந்தர சிறப்புக் குழு ஒன்றை அரசு உடனே பணியில் அமர்த்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.