Published : 04 Dec 2014 11:41 AM
Last Updated : 04 Dec 2014 11:41 AM

வரலாற்றுச் செல்வங்களை காப்பது நமது கடமை: அமைச்சர் செந்தூர் பாண்டியன் பேச்சு

தமிழகத்துக்குப் பெருமையளிக்கக் கூடிய வரலாற்றுச் செல்வங்கள் அழிந்துவிடாமல் காப்பது நமது கடமை என்று அமைச்சர் செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில், புராதன நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு தொடர்பான 6 வார காலச் சான்றிதழ் பயிற்சி தொடக்க விழா சென்னை அருங்காட்சியக நூற்றாண்டு கண்காட்சி அரங்கில் நேற்று நடைபெற்றது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை யில் நடைபெற்ற விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பூ.செந்தூர் பாண்டியன் பயிற்சியைத் தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தியாவிலேயே அதிக அளவிலான கோயில்கள் தமிழகத்தில் இருப்பது நமக்கு பெருமையளிக்கிறது. நமது வரலாற்றுச் செல்வங்களை அழிந்து விடாமல் காப்பதும், அவற்றை முறையாகப் பராமரிப்பதும் நமது கடமைகளில் ஒன்றாகும். இந்தியா விலேயே முதல்முறையாக தமி ழகத்தில்தான் புராதன நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது குறித்தும், காலத்தால் சிதைந்து வரும் நினைவுச் சின்னங்களை, கோயில்களை மீண்டும் புதுப்பிக்கும்போது அவற்றின் பழமை மாறாமல் எப்படி புனரமைப் பது என்பது குறித்தும் முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலமாக நமது வரலாற்றுச் சின்னங் கள் அழிந்துபோகாமல் காப்பதில் தமிழக அரசு என்றும் முனைப் போடு இருந்து வருகிறது என்றார்.

இவ்விழாவில், தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலர் ரா.கண்ணன், தொல்லியல் துறை ஆணையர் தா.கார்த்திகேயன், சுற்றுலாத் துறை ஆணையர் ஹர்சகாய் மேனா, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ப.தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x