Published : 09 Dec 2014 08:41 AM
Last Updated : 09 Dec 2014 08:41 AM

தமிழக காட்டுக்குள் மாவோயிஸ்ட்கள் ஊடுருவல்: மேற்கு மண்டல ஐஜி சங்கர் ஆய்வு

கேரள மாநிலத்தில் இருந்து நீலகிரி வழியாக தமிழகத்துக் குள் மாவோயிஸ்ட்கள் நுழைந் துள்ளதாக வெளியான தகவலின் அடிப்படையில், தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது என மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சங்கர் தெரிவித்தார்.

தமிழக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சங்கர், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கடந்த சில ஆண்டுகளாக மேற்கு மண்டலத்தில் நிகழ்ந்த குற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு, இது போன்று குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேற்கு மண்டலத்தில் பெருங்குற்றம் செய்தவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 2,800 நபர்களில் 1,800 பேர் காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளனர். மீதமுள்ள ஆயிரம் பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கிராமப் பகுதியில் குற்ற சம்பவம் நடக்காத வகையில் ரோந்து பணி அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநில எல்லையில் மாவோயிஸ்ட்களுக்கும், அதிரடிப் படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்து, அதில் தப்பித்த மாவோயிஸ்ட்கள் தமிழகத்தில் நுழைந்து இருப்பதாக வந்த தகவலையடுத்து, நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழக எல்லைப் பகுதிகளில் பாது காப்பு மற்றும் கண்காணிப்பு அதிகரிக் கப்பட்டுள்ளது.

வனப்பகுதியிலும், எல்லைப் பகுதியிலும் சோதனைச் சாவடிகள் கூடுதலாக அமைத்து தீவிர வாதிகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப் படுகிறது. குண்டு காயங்களுடன் மாவோயிஸ்ட்கள் தமிழகத்தில் ஊடுருவி இருக்காலம் என்பதால், நீலகிரி உள்ளிட்ட எல்லைப் பகுதியில் உள்ள மருத்துவ மனைகளை கண்காணித்து சோதனை நடத்தி வருகிறோம். எல்லைப் பகுதியான மலைக் கிராமங்களிலும் வனப்பகுதி யிலும் ரோந்துப் பணியில் ஈடுபட வுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x