

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பிறந்தநாளையொட்டி, அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி, சோனியா காந்தியின் பிறந்த நாளினையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கட்டான அரசியல் சூழ்நிலையிலும், ஒரு மாபெரும் இயக்கமான காங்கிரஸ் கட்சியை உயிரோட்டமாக வைத்திருந்து அரசியலை எதிர்கொள்ளக் கூடிய தங்களுடைய ஆற்றலைப் பாராட்டுவதோடு, தங்கள் பணிகள் மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.