Published : 24 Dec 2014 09:12 AM
Last Updated : 24 Dec 2014 09:12 AM

தமிழ்த் திரையுலகமே திரண்டு கண்ணீர் அஞ்சலி: இயக்குநர் கே.பாலசந்தர் உடல் தகனம் - இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் உடல், பெசன்ட்நகரில் உள்ள மின் மயானத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ரஜினி உள்ளிட்ட ஏராள மான நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக் கானோர் பங்கேற்றனர்.

உடல்நலக் குறைவால் கடந்த ஒரு வாரமாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் கே.பாலசந்தர் (84), நேற்று முன்தினம் இரவு காலமானார். இதுபற்றி தகவல் அறிந்ததும் திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைர முத்து உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மருத்துவ மனைக்கு சென்று பாலசந்தர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, அவரது உடல் மயிலாப்பூர் வாரன் ரோட்டில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் காலை 9 மணிக்கு வந்து பாலசந்தர் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் சிவக்குமார், சரத்குமார், விக்ரம், விஜய், கார்த்தி, ஜீவா, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்பாபு, நரேன், நெப்போலியன், தனுஷ், அதர்வா, மோகன், விவேக், ராதாரவி, விஜயகுமார், ராஜேஷ், எஸ்.ஜே.சூர்யா, ஜித்தன் ரமேஷ், வினய், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், பிரசன்னா, அர்ஜூன், விமல், சத்யராஜ், மனோபாலா, பொன்னம்பலம், எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், மயில்சாமி, எஸ்.வி.சேகர் உட்பட ஏராளமான நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நடிகைகள் மனோரமா, சரண்யா, குஷ்பு, சுஹாசினி, ஜெயப்பிரதா, ஸ்ரீபிரியா, ரேகா, சினேகா, விமலாராமன், காஞ்சனா, ஜெயஸ்ரீ, நந்திதா, கல்கி ஸ்ருதி, எழுத்தாளர் பாலகுமாரன், கவிஞர்கள் பிறைசூடன், பொன்னடியான், சினேகன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், ஆர்.கே.செல்வமணி, ஷங்கர், பிரியதர்ஷன், ஏ.ஆர்.முருகதாஸ், எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.எஸ்.ரவிகுமார், சேரன், அமீர், வசந்த், பாண்டிராஜ், பாலாஜி சக்திவேல், வெற்றிமாறன், சிம்புதேவன், டி.பி.கஜேந்திரன், எழில், பேரரசு, மாதேஷ் உட்பட பலர் பாலசந்தருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா, ஸ்ரீகாந்த் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், டிரம்ஸ் சிவமணி, தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், கேயார், ஆர்.பி.சவுத்ரி, கோவைத் தம்பி, டி.வி.வரதராஜன், ஜெமினி கணேசன் மகள் கமலா செல்வராஜ் ஆகியோரும் மலரஞ்சலி செலுத்தினர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், திருநாவுக் கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவ ளவன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் சேதுராமன், லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

மதியம் 1 மணிக்கு மேல் வீட்டில் குடும்ப முறைப்படி இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடத்தப் பட்டது. அதன்பிறகு பாலசந்தரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக் கப்பட்ட வாகனத்தில் இயக்குநர் பாலசந்தரின் உடல் ஏற்றப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது. மயிலாப்பூரில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மந்தவெளி, அடையார் வழியாக பெசன்ட்நகரில் உள்ள மின் மயானத் துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெசன்ட்நகர் மின் மயானத்தில் கே.பாலசந்தர் உடலுக்கு, அவருடைய குடும்ப முறைப்படி இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. அவருக்கு பிடித்தமான வெள்ளைச் சட்டை, பேன்ட் மற்றும் கருப்பு கண்ணாடி அணிவிக்கப்பட்டது. மாலை 5.25 மணிக்கு மயானத்தின் உள்ளே உடல் கொண்டு செல்லப்பட்டது. அவருடைய இளைய மகன் பிரசன்னா, குடும்ப மரபுச் சடங்கை செய்தார். இதையடுத்து, சிறிது நேரம் கழித்து அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, நடிகர் ரஜினி மற்றும் ஏராளமான இயக்குநர்கள் திரண்டு வந்திருந்து இயக்குநர் சிகரத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

*

இணைப்பு: > கே.பாலசந்தருக்கு புகழஞ்சலி செலுத்தும் சிறப்புப் பக்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x