

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங் களில் தொட்டில் குழந்தைகள் திட்டம் தொடங்கப்பட்ட பின் பெண் சிசு கொலைகள் குறைந்துள் ளன. இருந்தபோதும், மறைமுக மாக சில இடங்களில் பெண் சிசு கொலைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் மலை கிராமமான அஞ்செட்டி அருகே உள்ள பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கடந்த 11-ம் தேதி மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இதை அறிந்த அரசு மருத்துவ மனை செவிலியர் ஒருவர், விவ சாயியிடம் பேசி அந்தக் குழந் தையை மீட்டு ஓசூரைச் சேர்ந்த தம்பதிக்கு ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளதாகக் கூறப் படுகிறது. மேலும், அப்பகுதியில் செவிலியர் உதவியுடன் பலர் தங்களது பெண் குழந்தையை விற்பனை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நலத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.