Published : 18 Dec 2014 10:14 AM
Last Updated : 18 Dec 2014 10:14 AM

சிறப்பு முகாமில் உள்ளவரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதில் அரசு பாகுபாடு காட்டுவது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி

சிறப்பு முகாமில் உள்ளவரை இலங்கைக்கு திருப்பி அனுப்புவ தில் அரசு பாகுபாடு காட்டுவது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பிரசாந்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்த தாவது:

இலங்கையில் போர் நடந்தபோது எனது கணவர் மகேஸ்வரன், சென்னைக்கு வந்தார். பூந்தமல்லியில் உள்ள இலங்கை அகதி கள் சிறப்பு முகாமில் இருந்த சுரேஷ்குமார் என்பவருக்கு எனது கணவர் சிகிச்சை அளித்தார். 2012-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி எனது கணவர் திடீரென முகாமில் அடைக்கப்பட்டார். அப்போது, எங்களுக்கு திருமணம் ஆகி 2 மாதங்கள் மட்டுமே ஆகியி ருந்தது. எனது கணவர் அதன் பிறகு முகாமில் இருந்து விடுவிக் கப்படவில்லை.

இலங்கையில் இருந்து வெளி யேறியவர்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு வருமாறு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது. அந்நாட்டில் உள்ள சொத்துகள் குறித்து உரிமை கோரலாம். இல்லையெனில், அந்த சொத்து கள் பறிபோகும் எனவும் அறிவித் துள்ளது. எனவே, முகாமில் அடைக்கப்பட்டுள்ள எனது கணவரை விடுதலை செய்ய உத்தர விட வேண்டும். இவ்வாறு மனுவில் பிரசாந்தி குறிப்பிட்டிருந்தார்.

அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘முகாம்களில் அடைக்கப்பட்ட சிலர் விடுதலை செய்யப்பட் டுள்ளனர். ஆனால், மனுதாரரின் கணவர், இலங்கை போரில் விடுதலைப்புலிகளுக்கு தொழில் நுட்ப ரீதியில் உதவி செய்துள்ளார். அவரிடமிருந்து லேப்டாப், மின்னணு சாதனங்கள், ஜிபி ஆர்எஸ் கருவி, கணினி சிப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப் பட்டுள்ளன’ என குறிப்பிடப்பட் டிருந்தது.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு வருமாறு: இவ்விஷயத் தில் அரசு ஏன் பாகுபாடு காட்டுகி றது என்று புரியவில்லை. இலங் கையில் விடுதலைப்புலிகள் முற்றி லுமாக அழிக்கப்பட்டுவிட்டனர். மேலும், மனுதாரர் இலங்கைக்கு திரும்பிச் செல்வதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

மனுதாரரின் கணவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் கருவிகள் அனைவரது வீடுகளிலும் உள்ளன. இதை ஒரு காரணமாகத் தெரிவிப்பது ஏன் என்று புரியவில்லை.

எனவே, மனுதாரரின் கோரிக் கையை 2 வாரத்துக்குள் தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x