விகடன் குழும தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

விகடன் குழும தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
Updated on
2 min read

விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மு.கருணாநிதி (திமுக தலைவர்):

ஆனந்த விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைந்த செய்தியை அறிந்து பெரிதும் வருந்துகிறேன். அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பும், பாசமும் கொண்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத் தாருக்கும், விகடன் குழும நிறுவனங்களில் பணியாற்று வோருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்):

எஸ்.பாலசுப்ரமணியன் சென்னையில் காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதா பத்தையும் தெரிவித்துக் கொள் கிறேன்.

இல.கணேசன் (பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்):

எஸ்.பாலசுப்ரமணியன் குடும் பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றேன். அவரது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறேன்.

கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்):

மனிதநேய அடிப்படையில் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்):

விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்):

பத்திரிகை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றவர் எஸ்.பாலசுப்ரமணியன். அவரது மறைவின் மூலம் நேர்மையான பத்திரிகையாளரை இழந்துள்ளோம்.

தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்):

சமூகத்தில் நிலவும் பிற்போக் கான செயல்களுக்கும், சிந்தனைக் கும் எதிரான கருத்துக்களை கூறியவர் எஸ்.பாலசுப்ரமணியன். இதழியல் துறைக்கு அவரது மறைவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்):

பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் விகடன் குழுமத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் தொடர்ந்து கவனம் செலுத்தினார். பல்வேறு எழுத்தாளர்களை ஊக்குவித்ததில் அவரது பங்களிப்பு பாராட்டுக்குரியது.

ஜி.கே.வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர்):

விகடன் குழுமத் தலைவர் எஸ். பாலசுப்ரமணியன் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், விகடன் குழுமத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக சட்டமன்ற கட்சி தலைவர்):

பத்திரிகையாளர்களின் உரிமையை நிலைநாட்ட சிறைக்கு சென்றவர் எஸ்.பாலசுப்ரமணியன். அவருடைய மரணம் தமிழ் பத்திரிகை உலகுக்கு பெரும் இழப்பாகும்.

டாக்டர் பாரிவேந்தர் (ஐஜேகே தலைவர்):

புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்தவர் எஸ்.பாலசுப்ர மணியன். அவரது மறைவு இலக்கிய உலகுக்கும், தமிழ் பத்திரிகை உலகுக்கும் பேரிழப்பாகும்.

என்.சி.பி.வடிவேல் (தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர்):

விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியனுக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in