Published : 08 Dec 2014 09:28 AM
Last Updated : 08 Dec 2014 09:28 AM

அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம்: விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா பேச்சு

அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா கூறினார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு இந்து ஒற்றுமை மாநாடு சென்னை திருவான்மியூரில் நேற்று நடந்தது. மாநாட்டை விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக செயல் தலைவர் பிரவீண் தொகாடியா தொடங்கிவைத்து பேசியதாவது:

இந்துக்களின் சமூக, பொரு ளாதார நிலை குறைந்துகொண்டே வருகிறது. இலங்கையில் இறுதி கட்ட போரின்போது இந்துக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டார்களே, அப்போது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே. அங்கு 70 ஆயிரம் இந்து பெண் கள் விதவைகளாக வாழ்ந்து கொண் டிருக்கிறார்கள். இலங்கையில் மட்டு மல்ல, பாகிஸ்தானிலும், வங்க தேசத்திலும் இந்துக்கள் தாக்கப் படும்போது நம்மால் அவர்களை காப்பாற்ற முடியவில்லையே.

இந்துக்களின் தன்மானம் காக் கப்பட வேண்டுமானால், அயோத்தி யில் ராமர் கோயில் கட்டியாக வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம். அதேபோல், இந்தியாவில் ஒரு பசு கூட கொல்லப்படக்கூடாது.

தீண்டாமையை எங்கேயும் அனுமதிக்க மாட்டோம். தாழ்த்தப் பட்டவர் ஆகட்டும், பழங்குடியினர் ஆகட்டும் யாராக இருந்தாலும் இந்துக்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்தான். அனைத்து இந்துக்களையும் ஒன்றிணைக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் பேசும்போது, “மதமாற்றம் என்பது இந்துக்களுக்கு மாபெரும் சவால். இதைத் தடுக்க வேண்டுமானால் தீண்டாமையையும், சாதியையும் கைவிட வேண்டும். இந்து மத சாஸ்திரத்தில் எங்கேயும் தீண் டாமை குறித்து சொல்லப்பட வில்லை. மதமாற்றத்தை தடுக்க ஒவ்வொரு தெருவிலும் கண் காணிப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

ஓய்வுபெற்ற டிஜிபியும் மாநாட்டு வரவேற்புக்குழுவின் தலைவரு மான பாலச்சந்தர் தலைமை யுரையாற்றிப் பேசுகையில், “மத மாற்றத்துக்கான தடைகளை அடையாளம் கண்டு அவற்றை நீக்க வேண்டும்” என்றார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழ்நாடு மாநில தலைவர் மெய்யப்பன், தமிழ்நாடு, கேரளா செயலாளர் வெங்கடேசன், வட தமிழ்நாடு இணை அமைப்புச் செயலாளர் குமரன், ஆர்எஸ்எஸ் சென்னை மாவட்ட தலைவர் துரைசங்கர், திவாகர் உள்ளிட்டோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x