

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர் வாணையத்தின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பாக நேற்று மாநிலம் முழுவதும் குரூப்-4 பிரிவுக்கான தேர்வு நடைபெற்றது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4,963 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
மொத்தம் 244 தேர்வு மையங் களில் உள்ள 4,448 தேர்வுக் கூடங்களில் தேர்வு நடந்தது. இதில் மொத்தம் 12,72,293 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்தத் தேர்வுக்காக சென்னை யில் மட்டும் 263 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து மையங்களிலும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை இத்தேர்வு நடந்தது. தேர்வை கண்காணிக்க 4,448 முதன்மை கண்காணிப்பாளர்கள், 63,665 தேர்வுகூட கண்காணிப்பாளர்கள், 457 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
பதற்றமான தேர்வு மையங்கள் இணையவழியாக நேரடியாக கண் காணிக்கப்பட்டது. அனைத்து தேர்வுக்கூடங்களின் நடவடிக்கை களும் வீடியோ பதிவு செய்யப் பட்டன. முன்னதாக எழும்பூரில் உள்ள தேர்வு மையங்களை பார்வையிட்ட டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் கூறும்போது, “குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியிடப்படும். இன்றைய தேர்வில் சுமார் 84சதவீதம் பேர் பங்கேற்றுள்ளனர். இதன் கீ ஆன்சர்கள் 1 வாரத்தில் வெளியிடப்படும்’’ என்றார்.