Published : 01 Dec 2014 09:16 AM
Last Updated : 01 Dec 2014 09:16 AM

நாகர்கோவில் அருகே கார் கவிழ்ந்து விபத்து: பிரதமர் மோடியின் உறவினர் பலி

நாகர்கோவில் அருகே கார் சாலையில் கவிழ்ந்து, பிரதமரின் உறவுக்காரப் பெண் பலியானார். 4 பேர் காயம் அடைந் தனர். மேலும் ஒரு விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம், ஜினார்க் கார்டு மாவட்ட பஞ்சாயத்து தலைவி டிவிபென் வறீயா (49). பிரதமர் நரேந்திர மோடியின் உறவினரான இவர், தனது குடும் பத்தினருடன் தமிழகத்துக்கு கார் மூலம் ஆன்மிக சுற்றுலா வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரிக்கு காரில் வந்தனர்.

பணகுடி - காவல் கிணறு சாலையில் உள்ள புண்ணிய வாளன்புரம் அருகே வந்தபோது, நிலை தடுமாறி கார் சாலையில் கவிழ்ந்தது. இதில் டிவிபென் வறீயா, அவரது கணவர் பாபுலால், காரை ஓட்டி வந்த திருச்சூர் அபுபக்கர் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர் களை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். வழியில் டிவிபென் வறீயா பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்ற 4 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க் கப்பட்டனர்.

விபத்து குறித்து பணகுடி போலீஸார் விசாரிக் கின்றனர். விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனையில் டிவிபென் வறீயா உடல் பிரேத பரிசோதனை செய் யப்பட்டது.

அங்கு அவரது உட லுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கேரள மாநிலம், திருவனந்த புரம் கொண்டு செல்லப்பட்டு, அங் கிருந்து விமானம் மூலம் குஜராத் கொண்டு செல்லப்பட்டது.

3 பெண்கள் பலி

கழுகுமலையைச் சேர்ந்தவர் கோபால் (45). கொடைக்கானலில் பாத்திரக்கடை வைத்து குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார். கோபால் தனது மனைவி தங்கத்துடன் சொந்த ஊரான கழுகுமலைக்கு காரில் வந்தார்.

நேற்று கழுகுமலை அருகே காளாங்கரைப்பட்டி விலக்கில் வந்தபோது, அங்கு பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த உறவினர்களான காளாங்கரைப் பட்டி வடக்குத் தெரு ஞானராஜ் மனைவி அருள்பாக்கியம் (40), ஜெயராஜ் மனைவி ஜெயமேரி (43), மாரியப்பன் மனைவி மாடத்தி யம்மாள்(70) ஆகியோரை காரில் ஏற்றிக் கொண்டார்.

குமாரபுரம் விலக்கு அருகே சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலை யோர மரத்தில் மோதி ஓடையில் சரிந்தது. இதில், காரில் இருந்த மாடத்தியம்மாள், அருள் பாக்கியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜெயமேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கோபால் கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தங்கம் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனு மதிக்கப்பட்டுள்ளனர். கயத்தாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x