

ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.
ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் மிலோஸ்லேவ் ஸ்டேஸக் (செக் குடியரசு), ஜார்ஜ் ரொஸா டி ஆலிவெய்ரா (போர்ச்சுக்கல்), விஜார் லுபி (எஸ்டோனியா),
ஜிக்மண்ட் பெர்டொக் (ஸ்லோவேக் குடியரசு), பெட்கோ டொய்கோவ் (பல்கேரியா), டொமஸ் லுபாஸ்க் (போலந்து), சாம் (லக்ஸம்பர்க்), ஐவர்ஸ் க்ரோஸா (லாட்வியா) மற்றும் ஐரோப்பியக் கூட்டமைப்பு அரசியல் குழுத் தலைவர் அனி மார்ச்சல் ஆகியோர், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் மரி யாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.
தலைமைச் செயலர் கே.ஞான தேசிகன், ஆலோ சகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், அரசுத் துறை செயலர்கள் சி.வி.சங்கர், கே.சண்முகம், எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இரு தரப்பிலும் வணிக உறவுகள், தொழிற்துறை, மரபுசாரா எரிசக்தி, உள்கட்டமைப்பு போன்றவற்றில் பரஸ்பரம் பங்களிப்புத் திட்டங் களை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.