

தமிழக மீனவர், முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளில் பாஜக தலைவர் அமித் ஷா மவுனமாக இருப்பது கண்டனத்துக்குரியது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்திலும் மறுநாள் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பாஜக தலைவர் அமித் ஷா தமிழக மீனவர்கள் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் கவுரமாக வாழ வேண்டும் என பொதுப்படையாக குறிப்பிட்டிருக்கிறார். ஈழத்தமிழர் பிரச்சினை தமிழக மீனவர்கள் பிரச்சினையில் பாஜக அக்கறை கொள்ளவில்லை.
பாஜக மவுனம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து மத்திய அரசின் கெசட்டிலும் வெளியிடப் பட்டுவிட்டது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை. முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டி யுள்ளது.
தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் பாஜக தலைவர் மவுனமாக இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.