Published : 03 Dec 2014 10:22 AM
Last Updated : 03 Dec 2014 10:22 AM

உதவித்தொகை வழங்குவது நிறுத்தம்: மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் - திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடந்தது

கடந்த 4 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு தொகையை வழக்கம் போல வழங்கக் கோரி திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதியோர், மாற்றுத் திறனாளி கள், விதவைகளுக்கு தமிழக அரசு சார்பில் மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலி பயனாளிகளை கண்டறிவதாகக் கூறி திடீரென பலருக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டது. இத னால், கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக உதவித்தொகை அனை வருக்கும் கிடைக்கவில்லை. இதை மட்டுமே நம்பி உள்ள பல முதியவர்கள், மாற்றுத்திறனாளி கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசு வழக்கம்போல உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து வகை மாற்றுத் திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அடையாள அட்டை வைத் திருக்கும் அனைவருக்கும் மாற்றுத் திறனாளி அலுவலகம் மூலம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருவள்ளூர், ஊத்துக் கோட்டை, பொன்னேரி வட்டாட்சி யர் அலுவலகங்கள் முன்பு நடந்த இந்த போராட்டத்தில் ஏராள மானோர் பங்கேற்றனர்.சங்கத் தின் மாவட்டச் செயலாளர் சம்பத், துணை செயலாளர் நித்தியானந் தம், மாவட்டத் தலைவர் ரவிக் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு வட்டாட்சியர் அலு வலகத்தை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து, அனைத்து நிலை மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செய லாளர் வாசுதேவன் கூறியதாவது:

“சமூக நலத்துறையுடன் இணைந்துள்ள மாற்றுத்திறனாளி கள் துறையின் அனைத்து பணி களும் தனித்துறையாகவே செயல் பட வேண்டும்.

ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, தாலுகா அலுவல கங்களின் மூலம் வழங்கப் படுவதால், பல்வேறு உதவித் தொகை வழங்குவதற்காக ஏற்படுத் தப்பட்டுள்ள சட்டங்களை, மாற்றுத் திறனாளிகள் மீதும் திணிக்கின்ற னர். இதனால், மாற்றுத்திறனாளி கள் பாதிக்கப் படுகின்றனர்.

மேலும், அரசின் மூலம் வழங்கப் படும் உதவித் தொகையை, உடலின் ஊனத்தை கணக்கிட்டு குறிப்பிட்ட சதவீதத்திற்கு மேல் உடல் ஊனம் இருந்தால் மட்டுமே, வழங்கும் நிலை உள்ளது. இதனால், மாற்றுத்திறனாளிகள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதுதவிர, 5 ஆயிரத்துக்கு மேல் வருமானம் மற்றும் சொந்த வீடு ஆகியவை இருந் தால், தகுதியான நபர்களாக இருந் தாலும், அவர்களுக்கு உதவித் தொகை மறுக்கப்படுகிறது. இதனால், இந்த நிபந்தனைகளை தளர்த்தி மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வைத் திருக்கும் அனைவரையும் தகுதியான நபர்களாக கருதி, அரசின் உதவித் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம்.

செங்கல்பட்டு இடர்நிலைபாடு தனி வட்டாட்சியர், `தகுதியான நபர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படாதது குறித்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனைவருக்கும் உதவித் தொகை வழங்குவது தொடர்பாக, செங்கல்பட்டு கோட்டாட்சியரிடம் மனு அளியுங்கள்’ என கூறினார். இதைத் தொடர்ந்து, நாங்கள் கலைந்து சென்றோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x