Published : 09 Dec 2014 09:45 AM
Last Updated : 09 Dec 2014 09:45 AM

‘சென்னையில் திருவையாறு’ டிசம்பர் 18-ம் தேதி தொடக்கம்: அப்துல்கலாம் தொடங்கி வைக்கிறார்

‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சியை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சென்னை காமராஜர் அரங்கில் டிசம்பர் 18-ம் தேதி தொடங்கிவைக்கிறார்.

மார்கழி மாதத்தை முன்னிட்டு ‘சென்னையில் திருவையாறு’ கர்னாடக இசை நிகழ்ச்சியை ‘லஷ்மன் ஸ்ருதி’ நிறுவனம் கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வரு கிறது. இதில் பரதநாட்டியம், வயலின், வாய்ப்பாட்டு, வீணை, புல்லாங்குழல் என்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான விழா டிசம்பர் 18-ம் தேதி மாலை 3 மணிக்கு ‘திருவிழா’ ஜெய்சங்கர் நாதஸ்வர இசையுடன் தொடங் குகிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு பி.எஸ்.நாராயணசாமியின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நிகழ்ச்சியைக் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.

‘சென்னையில் திருவையாறு’ இசை விழா டிசம்பர் 25-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டு 52 இசை நிகழ்ச்சி களை நடத்துகின்றனர். தினமும் காலை 7 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x