Published : 01 Dec 2014 11:01 AM
Last Updated : 01 Dec 2014 11:01 AM

பிரதமரை ஒருமையில் பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது: வைகோவுக்கு ஹெச்.ராஜா பதில்

பிரதமர் மோடியை யாரும் ஒருமையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஹெச்.ராஜா கூறியதாவது: பிரதமர் மோடியை விமர்சிக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. விமர்சனம் என்பது ஜனநாயக உரிமை. கடந்த 12 ஆண்டுகளில் மோடி சந்திக்காத விமர்சனங்கள் இல்லை. ஆனால் தரம் தாழ்ந்துபோய் ஒருமையில் செய்யும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. வைகோ பல முறை இப்படியே பேசியுள்ளார்.

இலங்கையில் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, பிரதமர் மோடியை ‘வா’, ‘போ’, ‘நீ யார்’ என்று ஒருமையில் பேசினார். ‘7 மாநிலங்களில் இந்தி பேசுபவர்கள் உள்ளார்கள்’ என்று ராஜ்நாத் சிங் பேசியபோது, ‘அப்படியிருந்தா நீயே வச்சுக்க’ என்று வைகோ கூறினார். நாட்டின் முக்கிய தலைவர்களை இப்படியா ‘நீ, வா, போ’ என்று பேசுவது?

இன்னும் 100 ஆண்டுகளில் இந்தியாவைவிட்டு தமிழகம் தனித்துப் போய்விடும் என்றும் வைகோ பேசுகிறார். இது தேச துரோகமான பேச்சு. இதற்கே அவர்மீது தேசத்துரோக வழக்கு போட்டிருக்க வேண்டும். இன்றைக்கு நான் பேசியதை கண்டித்து மார்க்சிஸ்ட் போன்ற சில கட்சிகள் அறிக்கை விடுகின் றன. நூறு ஆண்டுகளில் இந்தியாவை விட்டு தமிழகம் தனித்துப் போய்விடும் என்று வைகோ சொல்வதை மார்க்சிஸ்ட் கட்சியோ, ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன், தமிழருவி மணியன் போன்றவர்களோ ஏற்றுக் கொள்வார்களா?

இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x