

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.3 கோடியில் புதிய அறுவைச் சிகிச்சை அரங்கம் மற்றும் வார்டு கட்டப்பட்டு வருகிறது.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் உள்நோயாளிகளாக 800 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். புறநோயாளிகளாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்காக 7 அரங் கங்கள் உள்ளன.
இந்த மருத்துவமனையில் பிறந்தது முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 15 ஆயிரம் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இவற்றில் 400 பச்சிளம் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிறந்து 28 நாட் கள் வரையிலான குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.3 கோடி செலவில் நவீன அறுவை சிகிச்சை அரங்கமும் தொடர் சிகிச்சைக்கான வார்டும் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளுக்கு ரூ.1.20 கோடியும், மருத்துவ உபகரணங்களுக்கு ரூ.1.80 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.