

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக நாகப்பட்டி னம், ராமநாதபுரம், காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட் டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
நாகை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 43 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். இது தொடர்பாக நாகை அக்கரைப்பேட்டை டாடா நகரில் உள்ள சமுதாயக் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நாகப்பட்டினம், புதுக் கோட்டை, காரைக்கால் மாவட்டங் களில் உள்ள மீனவக் கிராமங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்ப தாக தஞ்சாவூர், ராமநாதபுரம் பகுதி மீனவப் பிரதிநிதிகள் தெரி வித்தனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் உடனடியாக மீட்டு, இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும், பறிமுதல் செய்யப் பட்டுள்ள 87 விசைப்படகுகளை யும் மீட்க வேண்டும்.
இந்திய-இலங்கை கடற்பரப்பில் இரு நாட்டு மீனவர் களும் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும், ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான மிதவை வலை மற்றும் கருவிகள் வாங்க நிதி வழங்க வேண்டுமென வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி உடனடியாக வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குவது என்றும், நாகப்பட் டினம், ராமநாதபுரம், காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட் டங்களில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் வேலைநிறுத் தத்தில் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.