

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் மாற்றுத் திறனாளி களுக்கு முன்னெடுக்க வேண்டிய முக்கிய பிரச்சினைகள் நிறைய உள்ளது.
மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கையை அறிய முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து அவர்களின் நலனை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.