வீடுகளுக்கே சென்று 25 டன் பழைய சோஃபா, மெத்தைகள் அகற்றம்: மாநகராட்சி சேவையை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

வீடுகளுக்கே சென்று  25 டன் பழைய சோஃபா, மெத்தைகள் அகற்றம்: மாநகராட்சி சேவையை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மாநகராட்சி சார்​பில் பொது​மக்​கள் அளித்த தகவல் அடிப்​படை​யில், அவர்​களின் வீடு​களுக்கே சென்று கடந்த சனிக்​கிழமை 25 டன் பழைய சோஃ​பா, மெத்​தைகள் அகற்றப்பட்டன.

இது தொடர்​பாக மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சி​யின் சார்​பில் ஒவ்​வொரு சனிக்​கிழமை​களி​லும் பொது​மக்​கள் முன்​கூட்​டியே தரும் தகவலின் அடிப்​படை​யில், அவர்​களின் வீடு​களி​லிருந்து பழைய சோஃ​பாக்​கள், மெத்​தைகள், மரச்​சா​மான்​கள் மற்​றும் உடைகள் ஆகிய திடக்​கழி​வு​களை பெற்று அகற்​றும் பணி கடந்த ஆண்டு அக்​டோபர் முதல் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

அதனடிப்​படை​யில், நேற்று முன்​தினம் (ஆக.29) மட்​டும் 74 நபர்​களிட​மிருந்து வரப்​பெற்ற தகவலின் அடிப்​படை​யில், 25.2 டன் பழைய பொருட்​கள் பெறப்​பட்​டு, கொடுங்​கையூரில் உள்ள எரியூட்​டும் நிலை​யத்​துக்கு எடுத்​துச் சென்று விஞ்​ஞான முறை​யில் எரியூட்டி அழிக்​கப்​பட்​டது. இதற்​காக 35 வாக​னங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன.

ஒவ்​வொரு வார​மும் சனிக்​கிழமையன்று நடை​பெறும் இந்த சேவையை பெறு​வதற்​கு, பொது​மக்​கள் முன்​கூட்​டியே மாநக​ராட்​சி​யின் “நம்ம சென்​னை” செயலி​யில் பதிவு செய்ய வேண்​டும் அல்​லது மாநக​ராட்​சி​யின் 1913 என்ற எண்​ணுக்கு தகவல் அளிக்க வேண்​டும். சென்னை மாநக​ராட்​சி​யின் மூலம் பிரத்​யேக​மாக வழங்​கப்​பட்​டுள்ள 94450 61913 என்ற வாட்​ஸ்​அப் எண்​ணுக்​கும் தகவலை அனுப்​பலாம்.

இதனடிப்​படை​யில் மாநக​ராட்​சிப் பணி​யாளர்​கள் பதிவு செய்த நபர்​களின் வீடு​களுக்கு ஒவ்​வொரு சனிக்​கிழமை​யும் நேரடி​யாகச் சென்​று, பழைய சோஃ​பாக்​கள், மெத்​தைகள், மரச்​சா​மான்​கள் மற்​றும் உடைகள் உள்​ளிட்ட பொருட்​களை சேகரித்து பாது​காப்​பாக​வும், அறி​வியல் முறை​யிலும் அகற்​றும் பணி​களை மேற்​கொள்​வார்​கள். இந்த சேவையை பொது​மக்​கள் பயன்​படுத்தி பயன்​பெறு​மாறு கேட்​டுக் கொள்​ளப்​படு​கிறார்​கள்.

வீடுகளுக்கே சென்று  25 டன் பழைய சோஃபா, மெத்தைகள் அகற்றம்: மாநகராட்சி சேவையை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்
பக்ரீத் சலுகை என்ற பெயரில் குறைந்த விலையில் செல்போன் விற்பதாக மோசடி செய்த இருவர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in