

டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை மதுவால் பாதிக்கப்பட்டோர், அவர்களது குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரி மது குடிப்போர் விழிப்புணர்வு சங் கத்தினர் சென்னை சேப்பாக்கம் விருந் தினர் மாளிகை அருகே நேற்று உண்ணாவிரதம் இருந்த னர்.
இந்த உண்ணாவிரதப் போராட் டம் குறித்து தமிழ்நாடு மது குடிப் போர் சங்கத் தலைவர் செல்ல பாண்டியன் கூறியதாவது: மதுவால் அரசுக்கு ஆண்டு தோறும் ரூ.24 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. அதே நேரத்தில் மதுப்பழக்கம் காரணமாக பல பெண்கள் விதவைகளாகவும், பல குழந்தைகள் ஆதரவற்றவர் களாகவும் ஆகியுள்ளனர். டாஸ்மாக் வருமானத்தில் இருந்து அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மது குடிப்போருக்கு ரூ.5 லட்சம் அளவுக்கு காப்பீடு செய்துத் தர வேண்டும். மது குடிப்போருக்கென்று தனி மருத்துவமனையும் கட்ட வேண்டும்.
கள்ளச் சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் பொது நோக்கத்துடன் டாஸ்மாக் தொடங் கப்பட்டது. ஆனால் தற்போது அது வருவாய் ஈட்டும் நோக்கத் துடன் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு 2 முறை விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 4 முறை விலை யேற்றம் செய்ய முடிவு செய்யப்பட் டுள்ளது. இதை டாஸ்மாக் நிர்வாகம் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்