Published : 23 Dec 2014 09:23 AM
Last Updated : 23 Dec 2014 09:23 AM

தொழிற்சாலையை தொடர்ந்து இயக்க வலியுறுத்தி ‘பாக்ஸ்கான்’ தொழிலாளர்கள் ஆலை நுழையும் போராட்டம்: பேச்சுவார்த்தை இன்றும் தொடரும் என அறிவிப்பு

ஸ்ரீபெரும்புதூர் அருகே ‘பாக்ஸ் கான்’ தொழிலாளர்கள், தொழிற் சாலைக்குள் நுழையும் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து நடைபெற்ற தொழிலாளர் நலத் துறையினர், ஆலை நிர்வாகம், தொழிற் சங்கத்தினர் பங்கேற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தொழிற்பூங்காவில் இயங்கி வந்த செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவன மான பாக்ஸ்கான், போதிய ஆர்டர்கள் இல்லாததால் வரும் 24-ம் தேதி உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. இதற்கு, தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தொழி லாளர் நலத்துறையின் உதவி ஆணையர் தலைமையில், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆலை நிர்வாகத்துடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், ‘தொழிற்சாலை நிர்வாகம் 22-ம் தேதி முதல் தொழிலாளர்கள் பணிக்கு வரவேண்டாம். விடுமுறையுடன் கூடிய ஊதியம் அளிக்கப்படும்’ என தெரிவித்தது. இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தொழிலாளர் நலத்துறையும் ‘நீண்ட நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தொழிற்சங்க சட்டத்தில் விதிகள் இல்லை. அதனால், பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் வரை தொழிற்சாலை வழக்கும் போல் செயல்பட வேண்டும்’ என அறிவுறுத்தியது.

ஆனால், தொழிற்சாலை நிர்வாகம் இதை மறுத்ததால், சிஐடியு தொழிற்சங்க தலைவர் சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமை யில் பாக்ஸ்கான் தொழிலாளர் கள் ஆலை நுழையும் போராட்டம் நடத்த நேற்று தொழிற்சாலை முன்பு கூடினர். ஆலையின் பாதுகாவலர்கள் ஆலை கதவுகளை மூடி தொழி லாளர்களை உள்ளே விடவில்லை.

ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி கண்ணன் தலைமையில் ஏராள மான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலை யில், டிஎஸ்பி கண்ணன் ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக தொழிலாளர்கள் மத்தியில் புகார் எழுந்தது.

இதையடுத்து தொழிலாளர்களி டம், ‘தொழிற்சாலையை மூடவில்லை. உற்பத்தியை மட்டும்தான் நிறுத்துகிறோம். ஊதியத்துடன் விடுமுறை அளிக்கிறோம்’ என ஆலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்கு தொழிலாளர்கள் உடன்படாததால், ஆலையை வழக்கம்போல இயக்குவது குறித்து தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் தர்மசீலன் முன்னிலையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆலை தரப்பில் இருந்து முக்கிய அதிகாரிகள் வராததால் இன்று காலை மீண்டும் முத்தரப்பு பேச்சு நடைபெறும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து, பாக்ஸ்கான் தொழிற்சாலையின் சிஐடியுவின் தலைவர் ரஜினி கூறியதாவது: ஆலை நிர்வாகம், ஊதியத்துடன் விடுமுறை அளிப்பதாக கூறி தொழிலாளர்களை வெளியேற்றி விட்டு, இயந்திரங்களை எடுத் துச்சென்றுவிட முயற்சிக் கிறது. சில நாட்கள் கழித்து உற்பத்தி இல்லாமல் ஊதியம் மட்டும் எப்படி வழங்க முடியும் எனக் கூறி ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கே இந்த நடவடிக்கையாகும்.

ஆலையில் உற்பத்தியை நிறுத்தினாலும், தொழிலாளர் களை வழக்கம் போல் தொழிற்சாலைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து பின் வாங்க மாட்டோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x