Published : 13 Dec 2014 01:25 PM
Last Updated : 13 Dec 2014 01:25 PM

லஞ்சம் வாங்கிய கலால் உதவி ஆணையர் கைது

விருதுநகரில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் ரூ.19 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கலால் துறை உதவி ஆணையர் மற்றும் அலுவலக எழுத்தர் ஆகியோரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடை யில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருபவர் ராஜ்குமார். கடந்த சில நாட்களுக்கு முன் இந்தக் கடையில் கலால் துறை உதவி ஆணையர் பழனியாண்டி திடீர் ஆய்வு மேற்கொண்டு, ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததைக் கண்டுபிடித்தார்.

இதுகுறித்து டாஸ்மாக் மேலாளரிடம் புகார் அளிக்காமல் இருக்க வேண்டு மெனில், ராஜபாளையம் பகுதியிலுள்ள 34 டாஸ்மாக் கடைகளிலும் ரூ.1,000 வீதம் மாதந்தோறும் வசூலித்து, தன்னிடம் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்று ராஜ்குமாரிடம் பழனியாண்டி கூறினாராம்.

அதன்படி, ராஜபாளையம் பகுதியி லுள்ள கடைகளில் வசூலித்த ரூ. 19 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு நேற்று விருதுநகர் வந்த ராஜ்குமார், இதுதொடர் பாக ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவில் புகார் கொடுத்தார்.

அவர்களது ஆலோசனையின்பேரில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கலால் துறை அலுவலகத்துக்குச் சென்ற ராஜ்குமார், அங்கிருந்த உதவி ஆணையர் பழனி யாண்டியிடம் ரசாயனம் தடவிய ரூ.19 ஆயிரத்தை கொடுத்தார். பழனியாண்டி, லஞ்சப் பணத்தை வாங்கி அருகிலிருந்த அலுவலக எழுத்தர் சீனிவாசனிடம் கொடுத்தார்.

அப்போது, அந்தப் பகுதியில் மறைந் திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி வெங்கடேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் விஜய காண்டீபன், மதியழகன் உள்ளிட்டோர் பழனியாண்டி மற்றும் சீனிவாசனைக் கைது செய்து, லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x