Last Updated : 08 Apr, 2014 12:00 AM

 

Published : 08 Apr 2014 12:00 AM
Last Updated : 08 Apr 2014 12:00 AM

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்காது: கவுன்சலிங் தேதியை முடிவு செய்ய அரசுக்கு டிஎம்இ கடிதம்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2014-15ம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்காது என்று மருத்துவக் கல்வி இயக்கக (டிஎம்இ) வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ் கவுன்சலிங்கை எப்போது நடத்துவது என கேட்டு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக டிஎம்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 2012-13ம் கல்வி ஆண்டில் 18 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 2,145 எம்பிபிஎஸ் இடங்கள் இருந் தன. அப்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) ஆய்வு நடத்தியது. அதைத் தொடர்ந்து 2013-14ம் கல்வி ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரி - 85, ஸ்டான்லி - 100, சேலம் மோகன் குமாரமங்கலம் - 25, தூத்துக்குடி - 50, கன்னியாகுமரி - 50 என 5 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 310 எம்பிபிஎஸ் இடங்களை கூடுதலாக வழங்கியது.

410 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு

இவை தவிர புதிதாக தொடங் கப்பட்ட திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு எம்சிஐ அனுமதி அளித்தது. இதன் மூலம் 2013-14ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங் கள் 2,555 ஆக அதிகரித்தது.

இதேபோல 2013-14-ம் ஆண்டுக்கு முந்தைய கல்வி ஆண்டுகளில் செங்கல்பட்டு, கீழ்ப் பாக்கம் உள்பட 10 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங் களை எம்சிஐ அதிகரித்தது. இந்நிலையில், எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்ட 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்சிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக (டிஎம்இ) அதிகாரி கள் கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளில் தமிழ கத்தில் எம்பிபிஎஸ் இடங்கள் அதி கரிக்கப்பட்ட 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்சிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

எம்சிஐ அதிகாரிகள் ஆய்வு

பொதுவாக எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டால், குறிப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரியை தொடர்ந்து 5 ஆண்டுகளும், புதிய கல்லூரி என்றால் 6 ஆண்டுகளும் எம்சிஐ அதிகாரிகள் ஆய்வு செய்வர். அதன்படி, முதல்கட்டமாக சிவ கங்கை அரசு மருத்துவக் கல் லூரியில் கடந்த ஜனவரியில் எம்சிஐ அதிகாரிகள் ஆய்வு செய் தனர். மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தொடர்ந்து ஆய்வு செய்யவுள்ளனர்.

இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை, பேராசிரியர்கள், வகுப்பறைகள், மாணவர் விடுதி, ஆபரேஷன் தியேட்டர், மருத்துவ உபகரணங்கள், ஆய்வுக்கூடங்கள் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதை எம்சிஐ அதிகாரிகள் கணக்கிடுவர். இவைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால், சம்மந்தப்பட்ட கல்லூரி யில் மாணவர் சேர்க்கை நிறுத்தப் படுவதுடன் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

கவுன்சலிங் எப்போது?

வரும் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மருத் துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க வாய்ப் பில்லை. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியாக உள்ளது. எனவே, எம்பிபிஎஸ் கவுன்சலிங்கை எப்போது நடத்துவது என கேட்டு சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x