

தமிழக மீன்வளத் துறை முதன்மை செயலர் எஸ்.விஜயக்குமார் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மீனவர் களின் நாட்டுப் படகுகளுக்கு, மாதந்தோறும் 250 லிட்டர் மண் ணெண்ணெய் வரி விலக்குடன் விநியோகிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் இந்த ஆண்டு ஐந்தாயிரம் மீனவர்களின் நாட்டுப் படகுகளுக்கு, மாதந் தோறும் தலா 250 லிட்டர் மண் ணெண்ணெய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 80 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயைத் தமிழக அரசு மானிய நிதியாக ஒதுக்கியுள்ளது. மானியத்தின் அடிப்படையில், விற்பனை வரி இல்லாமல், லிட்டர் ரூ.25க்கு மீனவர்களுக்கு மண் ணெண்ணெய் வழங்கப்படும்.