

திமுக, அதிமுகவை நம்ப வேண் டாம் என மதுரையில் தேமுதிக சார்பில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து நேற்று நடந்த ஆர்ப் பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது: மின்சார ஒழுங்குமுறை ஆணையத் துக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்வதற்காக, மின் கட்டணத்தை உயர்த்தியதாக தமிழக அரசு கூறியுள்ளது. அப்படி யென்றால், காற்றாலைகளுக்குத் தர வேண்டிய ரூ.1,500 கோடி பாக்கியை ஏன் இன்னும் கொடுக்க வில்லை. மக்களுக்கு பிரச்சினை என்றால் எப்போதும் முன்னால் நிற்பேன். ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.
ஜெயலலிதா சட்டப்பேரவை யில் அறிவித்த 2023 தொலை நோக்குத் திட்டம், உடன்குடி மின் உற்பத்தி திட்டம் என்ன ஆனது? விலையில்லா அரிசி, மடிக்கணினி வழங்குகிறார்கள். எல்லாம் மக்களின் பணம்தான். இதை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.
நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் ரூ.10,000 அபராதம் கட்டிய முதல் அரசு அதிமுக ஆட்சிதான். ஊழல் செய்து ஜெயலலிதா தண்டனை பெற்றார். ஆனால், அவர் தியாகம் செய்து சிறை சென்றவரைப் போல அதிமுகவினர் கோயில், கோயிலாகச் சென்று முடி காணிக்கை செலுத்துகிறார்கள். பதவியேற்கும்போது அனைத்து அமைச்சர்களும் கண்ணீர் வடிக்கி றார்கள். உண்மையிலேயே பாசம் இருந்தால் பதவியைத் துறந்து விட்டுச் செல்ல வேண்டியதுதானே?
தற்போது அரசுத்துறையில் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகளை எல்லாம் ஆலோசகர்களாக நியமித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியிருந்தால், அடுத்து வருபவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்? ஆலோசகர்களுக்கு மட்டும்தான் அறிவு இருக்கிறதா?
தயவுசெய்து மக்கள் யாரும் திமுக, அதிமுகவை நம்ப வேண் டாம். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு உள்ளிட்ட மாநில அரசின் தொடர் கொடுமைகளுக்கு முடிவு கட்ட மக்கள் தயாராக இருக்க வேண்டும். நான் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்பட்டது கிடை யாது.
இவ்வளவு காலமாக இல்லாமல், அதிசயமாக காவல் துறையினர் எனக்கு வணக்கம் செலுத்துகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.