

மின்கட்டண உயர்வை கண்டித்து விஜயகாந்த் தலைமையில் 19ம் தேதி மதுரையில் தேமுதிக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மின்கட்டண உயர்வை கண்டித் தும், அதை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வலி யுறுத்தியும் அனைத்து எதிர்க் கட்சிகளும் குரல்கொடுத்தும், ஜெயலலிதாவின் வழிகாட்டு தலின்படி ஆட்சி செய்யும் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறிதும் செவிசாய்க்கவில்லை.
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை முன்னி றுத்தி, இந்த அரசு மின்கட்டண உயர்வில் இருந்து தப்பித்துக் கொள்ள பார்க்கிறது. ஆனால், இந்த மின்கட்டண உயர்வுக்கு அதிமுக அரசுதான் காரணம் என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள்.
அதிமுக ஆட்சி பொறுப் பேற்ற, சுமார் மூன்று வருடங் களில் 60 சதவீதம் அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்தி யுள்ளது. விலைவாசி உயர்வு, பஸ்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என மக்கள் திண றிக்கொண்டு இருக்கும் நிலை யில், கூடுதல் சுமையாக மின் கட்டண உயர்வு அமைந்துள்ளது.
உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை கண்டித்தும், அதை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தியும், எனது தலைமையில் மதுரையில் வரும் 19-ம் தேதியன்று தேமுதிக வின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஜன.7-ல் பொதுக்குழு
கட்சியின் பொதுக்குழு, செயற்குழு வரும் ஜனவரி 7-ம் தேதி கோவையில் நடைபெறும் என மற்றொரு அறிக்கையில் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.