அணுசக்தி தொழில்நுட்பத்தில் பாதுகாப்பு அம்சம் மிகவும் முக்கியம்: ரஷ்ய நிபுணர்

அணுசக்தி தொழில்நுட்பத்தில் பாதுகாப்பு அம்சம் மிகவும் முக்கியம்: ரஷ்ய நிபுணர்
Updated on
1 min read

அணுசக்தி தொழில்நுட்பத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் முக்கியமானவை என்று சென்னையில் நடந்த பயிலரங்கில் ரஷ்ய நிபுணர் வலியுறுத்தினார்.

அணுசக்தி தொழில்நுட்பம் பற்றிய பயிலரங்கம் அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் நேற்று நடந்தது. இதில், ரஷ்ய பெடரல் பல்கலைக்கழக அணுசக்தித் துறையின் மூத்த பேராசிரியரும், அணு தொழில்நுட்ப நிபுணருமான ஓலெக் டஸ்லிகோவ் கலந்து கொண்டார்.

அவர், “மேம்படுத்தப்பட்ட அணு தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு, ரஷ்ய அணுமின் உலைகள், அணுசக்தியில் ரஷ்ய கல்விமுறை” என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தி னார். அப்போது அவர் கூறியதாவது:

அணுமின் உற்பத்தி, அதற் கான உள்கட்டமைப்பு, மனித ஆற்றல் மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பாக இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுடன் ரஷ்யா இணைந்து செயல்பட்டு வருகிறது.

அணுமின் உற்பத்தி, அணு உலைகள் விரிவாக்கம், மூலப்பொருள்கள் உற்பத்தி குறைப்புக்கான அறிவியல் கோட்பாடுகள், அணுக்கழிவு களை கையாளுவது உள்ளிட் டவை தொடர்பாக நிறைய எதிர்ப்புகள் எழுகின்றன.

நவீன தொழில்நுட்பங்களுடன் அணு உலைகளை நிறுவும்போது பாதுகாப்பு அம்சங்களும் மிகவும் முக்கியமானவை. ஜப்பானில் புகுஷிமா அணு உலை விபத்தை தொடர்ந்து, அணுமின்சக்தி வளர்ச்சிக்கான உலகளாவிய திட்டங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அடுத்த தலை முறைக்கான அணு உலைகளை அமைப்பதற்கான தொழில் நுட்பங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

அணு தொழில்நுட்ப வளர்ச்சியில் ரஷ்ய பல்கலைக் கழகங்களின் பங்களிப்பை குறிப்பிட்ட அவர், இத்துறையில் நிபுணர்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in