திமுக ஆட்சியில் தான் மாற்றுத் திறனாளிகள் என பெயர் சூட்டப்பட்டது: கருணாநிதி பெருமிதம்

திமுக ஆட்சியில் தான் மாற்றுத் திறனாளிகள் என பெயர் சூட்டப்பட்டது: கருணாநிதி பெருமிதம்

Published on

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை யொட்டி, திராவிட மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கம் சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா, திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் மு.கருணாநிதி கலந்து கொண்டு, தையல் இயந்திரம், வேட்டி, சேலை, ஊன்று கோல், கருப்புக் கண்ணாடி உள்ளிட்டவற்றை பயனாகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

திமுக ஆட்சியில்தான் ஊனமுற்றோர் என்ற பெயர் மாற்றப்பட்டு மாற்றுத் திறனாளி என்ற பெயர் சூட்டப்பட்டது.

இப்பெயர் பல மாநில அரசுகளால் ஏற்கப்பட்டு, அப்பொருள்படும் படியான சொல்லைக் கொண்டு மாற்றுத் திறனாளிகள் நலதிட்டங் களை செயல்படுத்தி வருகின்றன. இந்த விழாவில் பங்கேற்று பயனாளி களுக்கு தேவையான கருவிகளை வழங்குவதில் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

திராவிட மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் திருத்தணி எஸ்.எஸ்.ஜோதி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற் றச் சங்கத் தலைவர் ரெ.தங்கம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in