

கூடங்குளம் முதலாவது அணு உலையில் 84 நாட்களுக்குப்பின் நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியிருக்கிறது.
ஓரிரு நாட்களில் ஆயிரம் மெகாவாட் அளவை மின் உற்பத்தி எட்டும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இங்குள்ள முதலாவது அணு உலையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் டர்பைன் ஜெனரேட்டரில் பழுது இருப்பது செப்டம்பர் 15-ல் கண்டறியப்பட்டது. அதை சரிசெய்யும் பணி முடிவடைந்ததை அடுத்து முதலாவது அணுஉலையில் மீண்டும் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் மின் உற்பத்தி தொடங்கியது.
நேற்று பகல் 12 மணியளவில் 410 மெகாவாட்டை உற்பத்தி எட்டியதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.