

தமிழக அரசின் உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் நேற்று இரவு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ ஆணையர் அபூர்வா மாற்றப்பட்டு உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹேமந்தகுமார் சின்ஹா இடமாற்றம் செய்யப்பட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணி அமர்த்தப்படுகிறார்.
இதுவரை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளராகப் பணிபுரிந்து வந்த மோகன் பியாரே மாற்றப்பட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.