

உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.பழனிமுத்து தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: “தங்க நகைகளுக்குச் சேதாரம் வசூலிப்பது சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும்.
அனைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களுக்கு மதிப்புக்கூட்டு வரியை கண்டிப்புடன் வசூலிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட முதல் டிவிஷன் பெஞ்ச் இந்த மனுவை நேற்று விசாரித்தது . இது தொடர்பாக அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
மனுதாரர் தனது கோரிக்கையை அரசுக்கு தெரிவித்து 6 நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் நிவாரணம் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறார். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.