Published : 30 Dec 2014 08:30 AM
Last Updated : 30 Dec 2014 08:30 AM

உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவ சிகிச்சையின்போது 3 பெண்கள் மரணம்: மேலும் 2 பேர் கவலைக்கிடம்

உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில், கடந்த 5 நாட்களில் பிரசவ சிகிச்சையின்போது 3 பெண்கள் உயிரிழந்தனர். 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால், மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

உதகை அரசு மகப்பேறு மருத் துவமனையில், கடந்த 23-ம் தேதி எமரால்டை சேர்ந்த ஜெயந்தி என்பவர் பிரசவத்துக்காக அனு மதிக்கப்பட்டிருந்தார். பிரசவத் துக்கு பின்னர் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் கடந்த 24-ம் தேதி உயிரிழந்தார்.

கூடலூர் அருகே கொளப் பள்ளியை சேர்ந்த அமுதா என்பவ ருக்கு கடந்த 26-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிக ரத்தப்போக்கு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார். உதகை, எல்க் ஹில் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவர் கவலைக்கிட மான நிலையில் நேற்று அனு மதிக்கப்பட்டார். மேலும் ராதிகா என்பவருக்கும் நேற்று ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. சரஸ்வதி என்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே, இவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சிறப்பு மருத்துவக் குழு

இந்நிலையில், கோவை மருத்து வக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்கள் சுந்தரி, சாந்தா அருள்மொழி, ரங்கநாதன் மற்றும் மனோகரன் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவினர், சுகாதாரத் துறை இணை இயக்குநர் (பொ) அமராவதி ராஜனுடன் உதகையில் ஆலோசனை நடத்தினர்.

உறவினர்கள் முற்றுகை

கவலைக்கிடமாக உள்ள ரேவதியின் உறவினர்கள் மருத்து வக் குழுவினரை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர் களின் அலட்சியமும், மருத்து வமனை ஊழியர்கள் பிரசவம் பார்ப் பதாலும்தான் இதுபோன்ற சம்ப வங்கள் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டினர். நீலகிரி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் (பொ) அமராவதி ராஜன் கூறியது: கடந்த 23-ம் தேதி முதல் 28 வரை உதகை மகப்பேறு மருத்துவமனையில் 16 அறுவை சிகிச்சை, 21 சுகப் பிரசவம் என 37 பிரசவங்கள் நடந் துள்ளன. அனைத்து குழந்தை களும் நலமுடன் உள்ள நிலையில், ஜெயந்தி, அமுதா ஆகி யோர் ரத்தப்போக்கு, மூச்சுத் திணற லால் உயிரிழந்துள்ளனர். இதே காரணங்களால் ரேவதி, ராதிகா, சரஸ்வதி ஆகியோரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

ஒரே ஒரு வெண்டிலேட்டர்

உதகை அரசு மருத்துவ மனையில் ஒரே ஒரு சுவாசக் கருவி (வெண்டிலேட்டர்) உள்ளதால், அவரச சிகிச்சைப் பிரிவில் ரேவதி அனுமதிக்கப்பட்டார். ராதிகா, சரஸ்வதி ஆகியோர் கோவைக்கு அனுப்பப்பட்டனர். பிரசவ நேரத் தில் தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. ஆனால், அதையும் மீறி உயி ரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவின் பேரில், அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரேவதியை, மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் பார்வையிட்டு, உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தர விட்டதுடன், உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் ஒரு பெண் மரணம்

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த சரஸ்வதி, நேற்று மாலை உயிரிழந்தார் என்ற தகவலை அறிந்த திமுக., தமுமுக மற்றும் இந்து முன்னணியினர் உதகை மகப்பேறு மருத்துவமனையையும், சுகாதாரத் துறை இணை இயக்கு நர் அமராவதி ராஜனையும் முற்றுகையிட்டனர்.

உதகை பி-1 காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான போலீஸார் அவர்களை சமாதானப் படுத்தினர். சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உதகை வரவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x