பேச்சுவார்த்தையை புறக்கணித்தது ‘பாக்ஸ்கான்’ முற்றுகையிட்ட தொழிலாளர்கள் கைது: ஒரே நாளில் 1,200 பேர் வேலையிழந்தனர்

பேச்சுவார்த்தையை புறக்கணித்தது ‘பாக்ஸ்கான்’ முற்றுகையிட்ட தொழிலாளர்கள் கைது: ஒரே நாளில் 1,200 பேர் வேலையிழந்தனர்
Updated on
2 min read

தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்கா மல் பாக்ஸ்கான் நிறுவனம் தொழிற்சாலையை மூடியது. இதனால் தொழிலாளர்கள் முற் றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஆலை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் 1,200 தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிப்காட் தொழிற்பூங்காவில் இயங்கி வரும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு போதிய ஆர்டர்கள் கிடைக்கவில்லை என அந்த நிறுவனம் கூறிவருகிறது. இதனால் வரும் 24-ம் தேதி உற்பத்தியை நிறுத்தப் போவதாக ஆலை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தர்மசீலன் தலைமையில், தொழிற்சங்கங்கள், ஆலை நிர்வாகம் பங்கேற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், ‘22-ம் தேதி முதல் தொழிலாளர்கள் பணிக்கு வரவேண்டாம். விடுமுறையுடன் கூடிய ஊதியம் அளிக்கப்படும்’ என ஆலை நிர்வாகம் கூறியது. இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தொழி லாளர் நலத்துறையும், ‘நீண்ட நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தொழிற்சங்க சட்டத்தில் விதிகள் இல்லை. பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் வரை ஆலை வழக்கும் போல் இயங்க வேண்டும்’ என அறிவுறுத்தியது.

தொழிற்சாலை நிர்வாகம் இதை செயல்படுத்தவில்லை. இதையடுத்து, தொழிலாளர்கள் நேற்று முன்தினம் ஆலைக்குள் நுழையும் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக கூறி போலீஸார் அவர்களை கைது செய்ய முற்பட்டனர். இதைத் தொடர்ந்து, இருங்காட்டு கோட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத் தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று தொழிலாளர் நலத்துறை அலுவலகத்துக்கு தொழிற்சங்கத்தினர், போலீஸார் மற்றும் உதவி ஆணையர் தர்மசீலன் ஆகியோர் வந்திருந்த னர். ஆனால், ஆலை நிர்வாகம் சார்பில் யாரும் வரவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தர்மசீலன், ‘பேச்சு வார்த்தையின் போது கூறியபடி தொழிற்சாலை தொடர்ந்து செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிற்சாலை வலுக்கட்டாயமாக மூடப்பட்டால் சட்டம், ஒழுங்கு பிரச்னைக்கு தூண்டியதாக கிரிமினல் குற்றத்தின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து, சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில், தொழிலாளர்கள் ‘பாக்ஸ்கான்’ தொழிற்சாலையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். இதனால், பெரும் புதூர் டிஎஸ்பி தலைமையி லான போலீஸார் தொழிலாளர் களை கைது செய்தனர். தொழிற்சாலையின் இந்த நடவடிக்கையால் 1,200 தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.

இதுகுறித்து, சிஐடியு தொழிற் சங்கத்தின் மாநில தலைவர் அ.சவுந்தரராசன் கூறியதாவது: இன்றைய பேச்சுவார்த்தைக்கு ஆலை நிர்வாகம் சார்பில் யாரும் வரவில்லை. இது, தொழி லாளர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறையை இழிவுபடுத்தும் செயலாகும்.

ஆலை நிர்வாகம் உண் மைக்கு புறம்பாக செயல்படுவது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 26-ம் தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையிலும் இதே கோரிக்கை வலியுறுத்தப்படும். கோரிக்கைகளை ஏற்றுக்கொண் டால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சு. அதுவரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in