

சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக சட்டமன்றக் குழுத் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளி யேற்றப்பட்டனர். மின்கொள் முதல் தொடர்பாக திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடந்தது.
தமிழக மின் வாரியம் தனியார் நிறுவனங்களிடம் மின் கொள் முதல் செய்வது தொடர்பாக எதிர்க் கட்சிகள் சார்பில், சட்டப்பேரவை யில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், ‘‘குறிப்பிட்ட 4 நிறுவனங் களிடம் அதிக விலைக்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் மைனாரிட்டி திமுக ஆட்சியில்தான் போடப் பட்டது. நீங்களே ஒப்பந்தம் போட்டு, பல கோடி ரூபாய்க்கு கொள் முதல் செய்துவிட்டு, எங்களிடம் கேட்பது நியாயமா?’’ என்றார்.
(இதற்கு திமுக எம்எல்ஏ,க்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.) தொடர்ந்து அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:
கடந்த 2009 மைனாரிட்டி திமுக ஆட்சியில், மூலப் பொருள் விலை குறைவான காலத்தில், நடுத்தர ஒப்பந்தத்தில் யூனிட் ஒன்றுக்கு 6.70 ரூபாய்க்கு நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்தது. ஆனால், தற்போது மூலப் பொருள் விலை அதிகமான நேரத்தில் கூட, அதிமுக ஆட்சியில் 5.50 ரூபாய்க்குத்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 2009-10-ம் ஆண்டில் தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும், யூனிட்டுக்கு 20 ரூபாய் விலையில், 2,200 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்தது. இந்தத் தொகையை அதிமுக ஆட்சிதான் செலுத்தியுள்ளது என்றார்.
அப்போது மு.க.ஸ்டாலின் எழுந்து, ‘நீங்கள் குறிப்பிட்ட திமுக ஆட்சியின் ஐந்தாண்டு காலத் தில் மின் கட்டணம் சல்லிக்காசு கூட உயர்த்தவில்லை’ என்றார். தொடர்ந்து அவர் தெரிவித்த கருத் துக்கு அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஸ்டாலின் பயன் படுத்திய வார்த்தை அவைக் குறிப் பிலிருந்து நீக்கப்பட்டது.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து, ‘‘திமுக ஆட்சியில் 2010-11-ம் ஆண்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அது உங்களுக் குத் தெரியவில்லை என்றால், தூங் கும் உங்கள் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியை எழுப்பிக் கேளுங்கள்’’ என்றார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை நோக்கி வந்து கூச்சலிட் டனர். பின்னர் முதல்வர் பன்னீர் செல்வம், ‘கடந்த ஆட்சியில் மின்சாரம் என்ன பாடுபட்டது என்பதை உங்கள் மைனாரிட்டி திமுக ஆட்சியில்… என்றதும், மீண்டும் திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித் தனர்.
பின்னர் மீண்டும் முதல்வர் பேசத் தொடங்கினார். ‘‘அறுதிப் பெரும் பான்மை இல்லாத திமுக ஆட்சியில், அவர்களின் அமைச்சர் ஆற்காடு வீராசாமியே, எங்கள் ஆட்சி மின்சாரப் பிரச்சினையால்தான் போகும் என்று ஒரு முறை ஒப்புக் கொண்டார்’’ என்று முதல்வர் பேசும் போது, திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் குறுக்கிட்டு பேச வாய்ப்புக் கேட்டார். அப்போது சபாநாயகர் அவரை எச்சரித்தார்.
இதையடுத்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எழுந்து, ‘‘எங்கள் ஆட்சியில் மின் கொள் முதலில் எள்ளளவு கூட தவறுக்கு இடமில்லை. மத்திய மின்சார சட்டம், ஒழுங்குமுறை ஆணைய வழிகாட்டுதலுக்கு உட்பட்டு வாங்குகிறோம். இந்த ஆட்சியின் நற்பெயரைக் கெடுத்து, தமிழகத்தை இருளில் தள்ளலாம் என்று பொய்க் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்) இந்த விஷ யத்தில் அநாகரிகமாக, வரம்பு மீறி பேசுகிறார். நீங்கள் (காங்கிரஸ்) தான் ஆட்சியில் பங்களிக்கவில்லை. உங்களுக்குத் தெரியாது. ஆனால் 5 முறை முதல்வராக இருந்த வர் (கருணாநிதி) கூட, அவர் ஆட்சி யில் போட்ட ஒப்பந்தம் குறித்து அவருக்கு தெரியாமல் இருக்கி றாரா அல்லது தெரியாதது போல் மக்களை திசை திருப்பப் பார்க்கி றாரா? மின்சார சட்டமே தெரியாமல் அவர் 5 முறை ஆட்சி நடத்தினாரா?’’ என்று பேசினார்.
இதற்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, சபாநாயகர் இருக்கையை முற்று கையிட்டு அமளியில் ஈடுபட்டனர். சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் அவையில் சலசலப்பு ஏற்பட் டது. இதையடுத்து, திமுக எம்.எல்.ஏ.க்களை அவையிலிருந்து வெளியேற்ற அவைக் காவலர் களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள் அவையின் வராண்டாவிலிருந்து வெளியே வரும் வரை, அரசை எதிர்த்துக் கோஷம் எழுப்பியபடி வெளியேறினர்.
அவையின் கண்ணியத்துக்கு களங்கம் ஏற்படும் விதமாக, சபா நாயகர் இருக்கையை முற்றுகை யிட்டு, அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய திமுக எம்.எல்.ஏ.,க்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று சபாநாயகர் தன் கண்டனத்தை அவையில் பதிவு செய்தார்.
பேரவை துளிகள்
சட்டப்பேரவை குளிர் கால கூட்டத் தொடரின் முதல் நாளில் காலை 9 மணிக்கே பேரவை வளாகத் துக்கு வந்த மு.க.ஸ்டாலின் இரண்டாம் நாளான நேற்று காலை 10 மணிக்குதான் வந்தார்.
மு.க.ஸ்டாலினுக்கும், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகனுக் கும் இடையே சிக்கல் என்று செய்திகள் வெளியான நிலை யில், அவர்கள் இருவரும் நேற்று ஒன்றாக பேரவை வந்தனர்.
தேமுதிக தலைவர் விஜய காந்தின் வருகை பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், அவருக்கு முன்னுரிமை கொடுக்கும் தொலைக்காட்சி சேனல் உட்பட அனைத்து ஊட கங்களும் அவரது வருகையை பதிவு செய்ய தவறின.
சமக எம்எல்ஏ சரத்குமார் கடந்த இரு தினங்களாக மதியம் 1 மணிக்கே பேரவையிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.
எந்த கட்சியும் நேற்று மதியம் 3 மணி வரையில் பேரவையைவிட்டு வெளிநடப்பு செய்ய வில்லை.