யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நாளை தொடங்குகிறது: வர மறுக்கும் யானைகளை வற்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தல்

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நாளை தொடங்குகிறது: வர மறுக்கும் யானைகளை வற்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தல்
Updated on
1 min read

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நாளை முதல் ஜனவரி 27ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப் பில் கூறியிருப்பதாவது:

முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் யானைகள் பல இடங்களில் அமைதி இழந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய நிகழ்வுகள் நடை பெற்றன. இதைத் தொடர்ந்து திருக்கோயில்களில் உள்ள யானைகளுக்கு ஓய்வு கொடுக் கவும், சத்தான உணவளித்து முறையாகப் பராமரிக்கவும் தேவையான சிகிச்சையை அளிக்கவும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாண்டும் திருக்கோயில் களுக்கும் திருமடங்களுக்கும் சொந்தமான 42 யானைகள், நாகூர் தர்காவுக்குச் சொந்தமான ஒரு யானை மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த திருக்கோயிலுக்குச் சொந்தமான 2 யானைகள் என 45 யானைகளுக்கு 48 நாட்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி, வனபத்ரகாளியம்மன் திருக் கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப் படுகையில் சிறப்பு நலவாழ்வு முகாம்கள் நடத்தப்படும். இதற்கான மொத்த செலவுத் தொகையான ரூ.89.84 லட்சத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இந்த முகாம் டிசம்பர் 11-ம் தேதி (நாளை) முதல் அடுத்த ஆண்டு ஐனவரி 27-ம் தேதி வரை நடைபெறும். இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் வனத்துறைக்கு சொந்தமான, வனத்துறையால் பராமரிக்கப்படும் 53 யானைகளுக்கு நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு, கோயம் புத்தூர் மாவட்டம் ஆனைமலை கோழிகமுதி, சாவடிவயல், சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களில் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்படும். இதற்கான மொத்த செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

முகாமுக்கு வர மறுக்கும் யானைகளை வற்புறுத்தி அழைத்துச் செல்ல வேண்டியதில்லை எனவும் நோயுற்று இருக்கும் யானை களை முகாமுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in