Last Updated : 22 Feb, 2014 12:00 AM

 

Published : 22 Feb 2014 12:00 AM
Last Updated : 22 Feb 2014 12:00 AM

விழுப்புரம் தொகுதியில் களம் இறங்கிய பாமக.வினர்- தேர்தலுக்கு முன்பே மக்கள் குறைகளைக் கேட்கும் வேட்பாளர்கள்!

ஓட்டுவாங்கும் வரை தொகுதிக்கு அடிக்கடி வரும் அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றிபெற்றதும் மக்களை திரும்பிப் பார்க்கமாட்டார்கள் என்பது தான் எழுதப்படாத அரசியல் விதி. இந்நிலையில், தேர்தல் வருவதற்கு முன்பே மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை சரிசெய்யும் முன்னோடி முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கிறது பாமக.

தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே பாமக போட்டியிடும் 10 தொகுதிகளை அறிவித்து, வேட் பாளர்களையும் அறிவித்து விட்டார் ராமதாஸ். அறிவிக்கப்பட்ட பாமக வேட்பாளர்கள் இப்போது அவரவர் தொகுதிகளில் பம்பரமாய் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பாமக போட்டியிட முடிவெடுத்தி ருக்கும் தொகுதிகளில் பாமக இணைய தள குழுவினர் மக்கள் பிரச்சினைகள் அனைத்தையும் தொகுத்து தலைமை யிடம் அளித்துள்ளனர். அதன் அடிப் படையில் மக்களைச் சந்தித்து குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி வேட்பாளர்களுக்கு உத்தர விட்டிருக்கிறார் ராமதாஸ். இதைத் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் பணியில் முதல் ஆளாக களம் இறங்கி இருக்கிறார் ஆரணி தொகுதி வேட்பாளராக அறிமுகப்படுத் தப்பட்டுள்ள முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி.

ஆரணி தொகுதிக்கு உட்பட்ட ஆரணி, செய்யாறு, போளூர், வந்தவாசி,செஞ்சி, மயிலம் சட்டமன்ற தொகுதிகளில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஏ.கே. மூர்த்தி, ஒவ்வொரு கிராமத்திலும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் கிராம மக்களிடம் நெருங்கிப் பழகி அவர்களின் அடிப் படை பிரச்சினைகளை அறிந்து வருகிறார்.

பெரும்பாலான இடங்களில் குடிநீர் பிரச்சினை இருப்பதாக மக்கள் அவரிடம் தெரிவித்ததை அடுத்து, குடிநீர் பிரச்சினையைத் தீர்த்து வைப்ப தற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நவீன இயந்திரங்களை அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறார் மூர்த்தி. வியாழக் கிழமை செஞ்சி நான்கு முனை சந்திப்பில், சுத்திகரிக்கப்பட்ட கூடிநீர் வழங்கும் இயந்திரத்தை வழங்கினார் அவர்.

ஆரணி, வந்தவாசி, செய்யாறு நகராட்சிகளிலும் செஞ்சி, அனந்தபுரம்,தேசூர், சேத்துப்பட்டு, களம்பூர், கண்ணமங்கலம், போளூர் பேரூராட்சிகளிலும் மொத்தம் 20 இடங்களில் தலா 6 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்தி ரத்தை அமைக்க திட்டமிட்டுள்ள பாமக-வினர், ஆரணி, கண்ணமங்கலம் பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை ஏற்கெனவே அமைத்துள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து பாமக நிதி வசூலித்து இந்தப் பணிகளுக்கு செலவிடப்படுவதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x